அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சிரித்து, விட்டுவிடுவோம்!

பொழுதுபோக்கு அரசியல்வாதியின் கூற்றுக்கு அண்ணா தந்த விளக்கம்

சென்னை, மார்ச் 16 காங்கிரசுக் கமிட்டி உறுப்பினராக சி.ஆர். இராமசாமி அவர்கள் சட்டமன்றத்தில் பேசுகையில், மாநகராட்சி மன்றத்தில் ஆளும் பொறுப்பை ஏற்றிருக்கும் தி.மு.கழகத் தோழர்களையெல்லாம் “அமெச்சூர் பாலிட்டீஷியன்கள்“ என்று குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

இதுபற்றி அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் பேசுகையில் பின் வருமாறு சொன்னார்.

“அமெச்சூர் பாலிட்டீஷியன்“ என்றால் இலாபத்துக்காக அரசியலைப் பயன்படுத்தாதவர்கள் என்று ஒரு பொருளுண்டு. அந்த வகையிலே எங்கள் தோழர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

............. என்றுள்ள ஒரு புத்தகத்தில் பார்த்தேன். அதில் சி.ஆர். இராமசாமி அவர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. திரு.சி.ஆர்.இராமசாமி ஒரு “ஹாபி பாலிட்டீஷியன்“ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொழுதுபோக்குக்கு அரசியலில் இருப்பவர்தானே இப்படிச் சொன்னார்! எனவே இதைக் கேட்டுச் சிரித்து, விட்டுவிட வேண்டியதுதான்.

(நம்நாடு - 17.3.1960)