அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

வழிபாடு

உடையாரும் இல்லாரும்
உவந்தேத்து கின்றார்கள்
அடியேனின் விண்ணப்பம்
அன்புடன் கேட்பீர், ஐயோ!
இன்னும் ஓர் கோடி ஐந்து
கிடைத்திடவே அருள்புரிவீர்!
பாடுபட்டுத தேடுவதோ
பகற்கொள்ளை தன்விளைவோ
நேர்மைவழி வகுத்துவருவதுவோ
குறுக்குவழிச் சரக்கோ
முறைபற்றி இலைகவலை.
சட்டம் எனைக் கொட்டாமல்

சர்வேசா! காத்திடுவீர்!
பேழைகள் வழிந்திடவே
பெரும் பொருள் தருவீரேல்
பதினாறில் ஒரு பாகம்
பகிர்ந்தளிப்பேன் பகவானே!

(காஞ்சி ஆண்டு மலர் - 1965)