அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


நீ என்னடி கண்டாய்!
(தேயிலைத் தோட்டத்திலே என்ற மெட்டு)

நீ என்னடி கண்டாய் அந்த
மன்னவன் தரும் இன்பம்!
வாயாற் சொல்ல முடியாதடி
தேனிலந்த இனிப்பேதடி

(நீ என்னடி)

தமிழ் பேசுதல் கேளாச்செவி
இருந்திடுவது வீணே.
அமைவாய் எனை மாதேஎன
அன்புன் தழுவிடுவானே

(நீ என்னடி)

இரவேபகல் நாளேகலை
நல்விருந் துயர்காதல்
உருவே விழி. வாழ்வே மணம்
இன்ப அருவி அதன் மீதிலே

(நீ என்னடி)

(கலிங்கராணி - 29.08.1943)