அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

ஆரிய மாயை போற்றி!

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய், போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஓட்டுவித்தை கற்றோய், போற்றி!
உயர் அநீதி உணர்வோய், போற்றி!
எமதுஇனம் கெடுத்தோய், போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரைஇதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!

(திராவிடநாடு - 03.10.1943)

('ஆரியமாயை' எனும் தோடர்கட்டுரையின் தொடக்கம். ஆரியர்பற்றிப் பிரஞ்சுப் பாதிரியார் குறிப்பிடும் சில ஆங்கிலச் சொற்களின் கருத்தோவியம் இது)