அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பதி - பக்தி
(புதிய நாடகம்)
பழைய பதிபக்தி நாடகம் பலரும் அறிந்ததே. குடிகாரக் கணவன் குணவதியான மனைவி, அவன் கூத்தி வீட்டில், இவள் குடும்ப பாரத்தைத் தாங்கிக்கொண்டு! அவன் இவளை நையப் புடைக்கிறான். இவளோ அவனைப் பூஜை செய்கிறாள், ஏன்? பதிபக்தி! உத்தமியின் உள்ளம் அவ்விதம் இருக்குமாம் - இருக்க வேண்டுமாம்! இந்தத் தத்ததுவத்தை நிலைநாட்ட எவ்வளவோ பாட்டு, கூத்து, நாட்டில், பழைய பதிபக்தி, குடும்ப வாழ்க்கையைப் பற்றியது. இது புதிது, பொதுவாழ்க்கை சம்பந்தமானது.

சிலநாள்களாகக் கம்யூனிஸ்டு கட்சிக்கும் காங்கிரசுக்கும், மனக்கசப்பு, தலாக் (விவாக விடுதலை) ஆகிவிடவில்லை என்ற போதிலும், கணவன் கழுத்தைப் பிடித்து நெட்டி வெளியே தள்ளிவிட்டதால், அழுத கண்களுடன், பெண், தாய்வீட்டுத் தாழ்வாரத்திலே வந்து நிற்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமை ஏற்படுவதற்குப் பன்னெடு நாள்களுக்கு முன்பே, புகைச்சல் இருந்தது. கண் கசக்குவது ஏனம்மா? என்று கேட்டால், கணவனிடம் அடிபட்ட காரிகை, ஆடுப்பூதும்போது கண்ணிலே கரிபட்டது என்று பொய்கூறிப் பதி பக்தியைக் காட்டும் வழக்கம் போலவே, அடிக்கடி காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டு கட்சி, பதி-பக்தியைக் காட்ட முயற்சித்து வந்தது. இவ்வளவு பிரியமான பத்தினி கிடைத்தும், அந்தக் கணவன், என்ன செய்கிறான்? பத்தினிகளின் புருஷர் வழக்கமாக எதைச் செய்தார் என்று கதை படிக்கிறோம்! கண்ணகியின் கண்ணீருக்கும், மாதவி தெளித்த பன்னீருக்கும் அன்று நடந்த போட்டி, முடிவடையவில்லையே! இன்று மன்றோ நடக்கிறது. குடும்ப விஷயத்திலே இத்தகைய நிலைமை கோரவிளைவுகளைத் தருகிறது, பொதுவாழ்க்கைத் துறையிலேயே நாச எண்ணங்களைத் தூண்டுகின்றன. உலகெலாம், சர்ச்சில் போன்ற ஒருசில ஏகாதிபத்ய வெறியேறியவர்கள் தவிர, மற்ற யாரும், ஆகழப்படும் பொது உடைமைக் கொள்கையை, காங்கிரஸ் - கம்யூனிஸ்டு தகறாரின் பலானக, எவ்வளவு மட்டரகங்களெல்லாம் கேலி செய்கின்றன, என்பதை எண்ணும்போது நெஞ்சம் நோகிறது. “அவன் சட்டைப்பையில் இருந்து ஒரு ரூபாய் யாரோ களவாடிவிட்டனர்” என்று எழுதவேண்டிய சமயத்தில், களவாடிவிட்டனர் என்ற பதத்துக்குப் பதிலாக யாரோ, ஆபேவாதம் செய்துவிட்டனர் என்று தேசியத் தினமணி, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எழுதிற்று. ஏட்டி உதைக்கும் காலைத் தொட்டுக் கும்பிடும் பத்தினிக் கோலத்திலே பொது உடைமைக் கட்சியினர் இருந்து வந்தனர் - நாம் அவ்வப்பொழுது கூறிவந்த அறிவுரைகளை அலட்சியப்படுத்தியதால் இன்று என்ன நடந்தது?

பம்பாயிலே, சுபாஷ்தினம் கொண்டாடினர். சுபாஷ்பாபு, காந்தீயக் காங்கிரசை எதிர்த்தவர், கண்காணா இடம் சென்று, காந்தியாரின் ஜீவாதாரக் கொள்கையான அஹிம்சையை லட்சியம் செய்ய மறுத்து, ஒரு விடுதலைப் படையைத் திரட்டியவர். அந்தப் படையில் இன, மத, குல பேதத்தை மறந்து பலர் சேர்ந்தனர். அத்தகைய ஒற்றுமையை நடைமுறையில் செய்து காட்டிய ஒப்பில்லாத தலைவருக்கு விழா! அதிலே நடந்தது என்ன? போலீசுக்கும் ஊர்வலக்காரருக்கும் இடையே தொல்லைகள் - இது இயற்கை, விடுதலை ஆரவாரமும் அதிகார முறையும் எங்கும், ஒன்றை ஒன்று தகர்க்கத்தான் முயலும். ஆனால், பம்பாய் ஊர்வலத்தின் விளைவு அதுதானா? இல்லை வெள்ளையனை ஒட்டுவதற்கு ஒத்திகை நடத்துவதாகக் கூறிக்கொள்ளும், காங்கிரசார், எங்கே பாய்ந்தனர்? பம்பாய், கம்யூனிஸ்டு கட்சி காரியாலயத்தின் மீது!

உலகோர் கண்டு ஆச்சரியப்படக்கூடிய புரட்சியை நடத்திக் காட்டிப் புது உலகைச் சிருஷ்டித்த மாவீரன், லெனின். அந்த வீரனின் விழாக் கொண்டாடப்பட்ட அதே கிழமையில், பம்பாய் கம்யூனிஸ்டு கட்சிக் காரியாலயத்துக்குள் நுழைந்து, அச்சுப்பொறிகளை நொக்கி, ஆட்களை அடித்து, கிடைத்த புத்தகங்களை எல்லாம் கொளுத்தி, பொது உடைமையைப் பழித்தும் இழித்தும் பெருங்கூச்சலிட்டு, பொதுஉடைமைக் கட்சிக்காரி யாலய டெலிபோன் கம்பிகளை அறுத்துச் சுமார் 1 இலட்ச ரூபாய்க்குச் சேதம் இருக்கும் என்று மதிப்பிடக் கூடிய விதத்திலே, மகத்தான காரியத்தைச் செய்திருக்கிறார்கள். யார்? ஜாரின் கையாட்களா? அவர்கள் செய்தால், வெட்கமும் துக்கமும் தோன்றாதே, பெருமை அடையலாம், அவர்கள் பித்தர்கள், எதைச் செய்கிறோம் என்பது அறியாமல் செய்கிறார்கள் என்று எண்ணிட இடமுண்டு. செய்வதர்கள், அஹிம்சாவாதிகள், நாட்டு விடுதலைப் படையினர். எந்த அறிவாளியும், படித்து, கண்களிலே கனலும் புனலும் ஒருசேரக் கிளம்பக் காண்பர். பொது உடைமை சம்பந்தமான ஏடுகளில்! அவைகளைத் தீயிலிட்டனராம் தேசபக்கதர்கள்! அவைகளைத் தீயிலிடடுவிட்டு, மனுபராசர் மாந்தாதா ஆகியோரின் ஏடுகளைக்கொண்டு நாட்டைத் திருத்துபவர்கள் தானே அவர்கள்!! “கண்ணன் காட்டிய வழி” இருக்க, காரல்மார்க்ஸ் அவர்களுக்கு ஏன்?

பொதுவாழ்க்கையிலேயும், கட்சி நடவடிக்கைகளிலேயும், நாட்டிலே கலவரங்களும், வீணாரவாரங்களும், நாகரிகமும் பண்பும் படைத்த மக்களை நடுங்க வைக்குமளவு நடைபெற்று வருவதை நாமறிவோம். இந்த நிலைமை, வளர்ந்து வருகிறதேயன்றி, குறைந்துபடுவதாகவும் இல்லை. ஆகவே நாம் கம்யூனிஸ்டு கட்சியினர்மீது காங்கிரசார் சீறிப் போரிடுவதைச் சிரிப்புக்கிடமான காரியமாகக்கொண்டு இதனை எழுதவில்லை. சிந்தனைக்குப் பலரும் வேலை தரவேண்டும் என்பதற்கே இதனை எழுதுகிறோம்.

காங்கிரஸ், இன்று எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர்கள், இச்செயல்களைக் கண்டு ஆச்சரியப்பட மாட்டார்கள். கிராமத்து மிராசுதாரன், பண்ணைக் கூலியை மரத்திலே கட்டிவைத்து அடிக்கிறான் - இல்லை - அடிக்க மற்றொரு கூலியை ஐவுகிறான், நியாயமல்ல! ஆனால் நடக்கிறது! நடைபெறுகிறது ஆனால் நியாயமா என்று யாரும் கேட்க முடியாது. மிராசுதாரால், அந்தத் தர்பார் நடத்தமுடியும், அதற்கேற்ற அந்தஸ்து ஆள் ஆம்பு இருக்கிறது. அவர் ஆயிரம் பேருக்கு “ஐயா” சர்க்காருக்கு அவர் ஒரு “ராவ்சாகிபு”. அடிபட்டவன் யார்? இறாணாக் கூலிக்கு இலாய்ப் பறக்கும் முனியன்தானே!! பணபலம், பத்திரிகை பலம், படைத்த காங்கிரஸ், இந்தியாவின் ஏகபோக மிராசுதாரன் நிலைமையில் இருக்கிறது. எனவே அதனிடம் மிலாறுகொண்டு முனியûனுயம் கந்தனையும் அடிக்க ஆட்கள் ஏராளம். ஆகவே ஆக்காரியம் தங்குதடையின்றி நடைபெறுகிறது. மிலாறு நமது கட்சியின் மீது பாய்வதுண்டு - பாய்ந்தது. சென்ற கிழமை, காலமெல்லாம் கஷ்டத்தைப் பார்க்காமல், கொள்கைக்காக ஆலைந்து திரியும் ஆற்றல் மிக்க நமது பெரியார்மீது பாய்ந்தது. சின்னாளப்பட்டி என்ற ஊரிலே, அவர்மீது வீசப்பட்ட கல் உண்டாக்கிய வடு, அவர் கரத்தில் இருக்கிறது. நாம் அவ்வித நிலைமைகளின்போது, வருத்தம் கொள்வதுமில்லை, ஆச்சரியப்படுவதுமில்லை, ஊரெல்லாம் காங்கிரசின் பிரச்சார பலத்தால் ஏவை ஏவைகளைச் சரி என்று நம்பிக் கொண்டுள்ள னரோ, அந்தத் திட்டங்கள் தவறு என்று நாம் கூறுகிறோம், எனவே, குட்டு வெளிப்படுகிறதே என்ற கோபத்தால், கல்வீசுகிறார்கள் என்று எண்ணி, கல்வீசிய நேரம் போக மற்ற நேரத்தில் நமது சொல்லைக் கேட்டார்களல்லவா, அதுபோதும் என்று திருப்தியும் ஆடைகிறோம். ஆனால் கம்யூனிஸ்டுகளின் விஷயம் அப்படியில்லையே! அவர்கள் படும் கஷ்டம் பதிபக்தியின் விளைவு!! இவ்வளவு இழிவாக நடத்தப்பட்டும். கம்யூனிஸ்டுக் கட்சி, ஆம்முசுவாமிநாதனுக்கும் அன்பர் சடகோபாச்சாரியாருக்கும் “ஓட்” தரும்படி மக்களுக்குக் கூறுவோம்” என்றல்லவா, பத்தினி பதிகம் பாடக் கேட்கிறோம். பரிதாபம் நிறைந்த இந்தப் புதிய பதிபக்தி நாடகத்தின் ஆறுதிக் கட்டத்தைக் காண நாம் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்!!

(திராவிடநாடு 27-1-46)