அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காமவேள் நடனசாலையில் கற்பூரக் கடை!

புராணப் பிரசாரத்தின் விளைவு என்ன?
பூசுர அரசு! புலவர் முரசு!

பூவையரைப் பூரிப்புடன் புகழ்வதிலே புராணம், முதலிடம் பெற்று விளங்குகிறது! சாது சன்யாசிகள் பட்டியிலே வந்தவர்கள் வேண்டுமானால், தேகத்தின் நிûலாமையைப் பற்றியும், அதன் ஆபாசத்தைப் பற்றியும்,

காகமொடு கழுகலகை நாய்நரிகள்
கற்று சோறிடுதுருத்தி
கால்இரண்டு, நவவாசல் பெற்றுவளர்
காமவேள் நடனசாலை
மோக ஆசைமுறியிட்ட பெட்டி
மும்மலமிகுந்து ஓழுகு கேணி

என்று பாடியிருப்பர். ஆனால் இந்த நிலையில்லாத, ஆபாசமிகுந்த தேகத்தைப் பற்றி, அதிலும் தையலரின் தேகத்தைப் பற்றிப் பாடத் தொடங்கினாலோ, பக்திப் பாசுரக்காரரும், பாராயணநூல் கோத்தவரும், பரமன் அருள் பெற்றவரும், அங்கம் ஒவ்வொன்றும அழகுற ஆகக்கண்முன் நிறுத்தி, அளவும் தன்மையும் கண்டு கனிமொழியினால் கூறுவதிலே, நிகர் இல்லாதிருப்பதைக் காணலாம். மும்மலக்கேணியே, வேறோர் பக்தர் வர்ணித்திடும் வகையைக் காணவேண்டுகிறோம்.

மலரணி கொண்டைச் சொருக்கிலே!
சொலுமொழி யின்பச் செருக்கிலே
நிலவொளி அங்கக் குலுக்கிலே
நிறைபரிமள கொங்கைக் குடத்திலே

என்று “குளோசப்” காட்சிகளை, முதல்தரமான சினிமா டைரக்டரும் பொறாமைப் படும் அளவுக்குக் காட்டிவிட்டு, “நிமிஷம் ஆணங்கிய” செய்தியைக் கூறி, அதன் பலனாக அந்நங்கை, “சொப்பனத்திலே” வருவதையும் கூறிக் கடைசியில் முருகோனே! மால்மருகோனே! இதனின்றும் என்னைக் காப்பாற்று என்று முடிப்பார். வெல்லுஞ்சொல், கொல்லுங்கண், வேட்கை நகை, குறுகிய நெற்றி, இரண்டகுழல், திரண்டதனம், மருட்டும்விழி, மதுர இதழ், இவைகளை அவர்கள் துதித்திருப்பதைவிட, அளவிலே, ஆறுமுகனையோ, ஆவரின் ஐயனையோ துதித்திருக்கும் அளவு, குறைவாகத் தான் இருக்கும்! பாயாசமுடன் விருந்துண்டான பிறகு, தெருத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, என்னமோ, பசி அடங்கக் கொஞ்சம் சாப்பாடு! அவ்வளவுதானே வேண்டும். அந்தச் சாப்பாடு எதுவாக இருந்தால் என்ன, கூழானாலும் கும்பி நிரம்பினால் போதும் என்று கூறும் குறும்பரின் செயலை நினைவிற்குக் கொண்டுவரும், பிராணிகர்களின் சொல்! ஆண்டவரின் செயலை வர்ணிக்ககும் இடத்திலும் பெரும்பகுதி, இடவர் சம்பந்தப்பட்ட சமயங்களிலே, குத்து, வெட்டு, அடி, பிடி, நசுக்கு, வெல், கொல் என்ற செயல்கள் செய்தாரென்றும், மாதர் சம்பந்தப்பட்ட இடங்களைக் குறிக்கும்போது, குலவு, தழுவு, கூடு, பாடு, இளகு, பழகு, விரும்பு, நெருங்கு, இரத்தழுவுதல், இடை சோர இடுதல், நிலவில் குலவுதல், புனலாடுதல், கானம் பாடுதல் எனப் போன்ற செயல்களைச் செய்தனர் என்றே பெரும்பகுதி இருக்கும். அதாவது, இயற்கையாக மக்களுக்கு எத்தகைய வர்ணனைகளைத் தந்தால் சுவை இருக்குமோ என்று அறிந்து சித்தரிக்கப் பட்டிருக்கும். இதனால்தான், புராணங்களை போதை தரும் லேகியம் என்று கூறினோம். போதை உடல் வளத்தைக் கெடுத்து உள்வலுவைப் போக்குவது போன்றே, புராணமும் மக்களின் மதியை மாய்த்து விடுகிறது. ஆகவேதான், மக்களின் மதிதுலங்க வேண்டும் என்பதிலே அக்கரை கொண்டவர்கள், இந்தப் புராண போதையை உட்கொள்ளாதீர் என்று கூறுகின்றனர். போதையின் சுவையிலே இலயிப்போரும், அந்தப் பொருளை விற்போரும் இருப்பது போலவே, புராண மயக்கத்தி லாழ்ந்தவரம், புராணத்தை வாணிபம் செய்பவரும் உள்ர். ஆர்கள் ஆயாச மடைவதற்குக் காரணம் இருக்கிறதல்லவா! அவர்களின் ஆயாசத்தை எண்ணி நமது நோக்கத்தை விட்டுவிட முடியுமா, விட்டு விடுவது முறையாகுமா? நாமோ, சரிந்து கொண்டிருக்கும் சமுதாயத்தைச் சீராகத் திருத்தி அமைக்க விரும்புகிறோம். தாழ்நிலை அடைந்த இனத்தவர் மீண்டும் தலைதூக்கி வாழ வழிகாண விழைகிறோம். இங்ஙனம் முயற்சி செய்யாத காரணத்தால், முன்னாளில் முடிதரித்துவாழ்ந்த இனம் இன்று மூலையில் ஊலாவும் காட்டு மிராண்டிகளாகிவிட்டதைக் காணும்போது, நமது கடமையைச் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல, அதனைத் துரிதமாக செய்தாக வேண்டும், துளியும் தயக்கமின்றிச் செய்தாக வேண்டும் என்ற உறுதிப் பலப்படுகிறது. தொதவரின் நிலை என்ன ஆயிற்று? சிகப்பு இந்தியர் நிலை என்ன ஆயிற்று? ஏன் அவர்கள் ஆக்கதிக்கு ஆளாயினர்? என்பதன் “சூக்ஷமத்தை” ஆராய்ந்தால், மூடி வைத்தது, கேடு தானாகப் போய்விடும் என்று இருந்தது, ஆகியவைகளே, இந்த இனங்களை அழித்துவிட்டன என்பதை உணரலாம்.
***

புராணத்திலே உள்ள கருத்துகளில் பல நாளாவட்டத்திலே மறைந்து விடுகின்றன என்பதும், பொது அறிவு பரவப்பரவ, பல கருத்துக்கள், ஏள்ளி நகையாடப்பட்டுத் தள்ளப்பட்டு விடுகின்றன என்பதும் உண்மை. ஆனால் சில கருத்துக்கள், உரம் குறையாமல் உள்ளன. சிலவற்றுக்கு உரம் தருகிறார்கள். ஏன்? எத்தகையை கருத்துகளுக்கு? எந்தெந்தக் கருத்துக்கள், ஒருசிறு கூட்டத்தின சுகபோக வாழ்வுக்கு வழிசெய்கின்றனவோ, ஒரு கும்பல் பாடுபடாது வாழ மார்க்கமாகிறதோ அந்தக் கருத்துக்கள், கால வேகம், பொது அறிவு பரவுதல் என்பவைகளால் தாக்கப்பட்டாலும், எந்தச் சிறு கூட்டம், அத்தகைய கருத்துக்கள் நிலவி இருப்பதால், தங்களுக்கு இலாபம் இருக்கிறதோ, அவைகளைக் கெடவிடாதபடி பார்த்துக்கொள்வதிலும், உரம்போடுவதிலும் கண்ணுங்கருத்துமாக இருக்கிறது. இங்கு அந்தச் சிறுகூட்டத்திடமே, “பிரச்சாரயந்திரம்” சிக்கிக் கொண்டிருப்பதால், தங்கள் சுகவாழ்வுக்கு உகந்த கருத்துக்கள் அழிந்துபடாமல் பார்த்துக்கொள்ள, அவர்கள் யந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
***

கம்பவுண்டர் கேசவன், டாக்டர் தாமோதரனுக்குத் தொல்லை தராமல், இதமாகப் பேசி, ஒழுங்காகவே நடந்து வந்தான். கேசவா! கேசவா! என்று டாக்டர் ஒரு நாளைக்கு நூறு முறையாவது, கூப்பிடுவார். அவனும் அன்பும் பணிவும் தோன்றவே நடப்பான். கேசவன், டாக்டர் தாமோதரனுக்குக் கம்பவுண்டர்தான், ஆனால் தந்தைக்கு மகனாயிற்றே! அவன் தந்தையோ, மணிமந்திர வைத்யர்! அதாவது நோய்தீர மருந்தும் தருவார், மந்திரமும் செய்வார். டாக்டர் நாடி பார்த்து, நாக்கை நீட்டச் செய்து பரிசோதித்து, மருந்து எழுதிக் கொடுத்தான பிறகு, நோயாளி உள் அறைக்கு வந்து, சீட்டைக் காட்டியதும், கம்பவுண்டர் கேசவன் அவனைப் புன்னகையுடன் வரவேற்று உட்காரச் சொல்லிவிட்டு, மருந்து கலக்கிக் கொண்டே பேசுவான்.

“இந்த வயித்துவலி எவ்வளவு காலமாக இருக்குத, சார்”.

“அதை ஏன் கேக்கறிங்க, என்னமோ ஏன் போறாதவேளை, போன கார்த்திகையிலிருந்து இந்தக் கர்மம் என ஊசிரை வாட்டுவது”.

“ஒயோ! பாவம்! ஆமாம், ஏன் இவ்வளவு நாளாக மருந்து சாப்பிடவில்லை?”

“சாப்பிடவில்லையா? இதுவரையிலே ஏன் வயித்துக்குள்ளே, ஒரு கிணறு மருந்து போயிருக்கும் டாக்டர் சேகர், டாக்டர் லோகநாதன், கெவர்மெண்டு ஆஸ்பத்திரி, எல்லாம் முடிஞ்சி, இப்போ இங்கே வந்தேன்”.

“ஓஹோ! பல இடத்திலே மருந்து சாப்பிட்டாச்சா. (ஒரு விநாடி மௌனம்) டாக்டர், என்ன செய்கிறார் என்று கொஞ்சம் ஏட்டிப் பாருங்க.

(பார்த்து விட்டு வந்து)
“பேப்பர் படிக்கிறார்”

“சார்! ஒரு விஷயம், உங்க மனசோடு போட்டு வையுங்கோ. இப்படிப்பட்ட வயித்துவலிக்கு மருந்து சாப்பிட்டா மட்டும் போதாது, உடம்பாலொத்தது மருந்தாலே போகும். சிலது, மந்திரிச்சாதான் போகும். மகாதேவ முதலியாருக்கு இரட்சைக்கட்டின பிறகுதான் வலி நின்றது.”
“அப்படியா? எங்கே, மந்திரிக்கிறார்கள்”.

“நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது. எங்க தகப்பனார் கூட, மந்திரிப்பார்

“பெயர்!”

“மணிமந்திர ஆவுஷதாலயம் மன்னார் செட்டியார்”

“இந்தப் பேச்சுக்குப் பிறகு, நோயாளி மணிமந்திர ஆவுஷதாலயம் போகிறான்! கேசவன், கம்பவுண்டராக இருந்து டாக்டருக்கு என்ன பயன்?

****

இங்கு, இத்தகைய கேசவன்மார் கூட்டம் இருக்கிறது. அவர்கள் புத்துலகக் காரியாலயத்திலே கூடப்பணிப்புரிவர், ஆனால் பழைமையின் ஏஜெண்டாகவே மறைமுகத்தில் வேலை செய்வர். இந்தக் கூட்டமே, புராணக் கருத்துக்களிலே, தமது சுயநலக் காரியத்துக்கு ஏற்றவைகள் பழுதுபடாதபடி பார்த்துக் கொள்வது. இதன் பயனாகவே அந்தக் கருத்துக்கள், நாட்டு மக்களிடை இன்றும் நடமாட முடிகின்றன. இல்லையானால், புராணகால எண்ணங்களிலே, எவ்வளவோ மாறிஇருக்க, எத்தனையோ விட்டுக்கொடுக்க இதே கூட்டம் தயாராக இருக்க, ஒருசில கத்துக்களை மட்டும் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருப்பானேன்? விட்டுவிட மறுப்பானேன்? உலகம் தட்டையாக இருந்தது என்ற எண்ணத்தைக் கொண்டுதான், இரணியாட்சதன், பூலோகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்று புராணம் எழுதப்பட்டது. இன்று எந்தச் சாஸ்திரியாவது, புராணீகராவது, பூமி உருண்டை வடிவம் என்று பள்ளிக்கூடங்களிலே, போதிக்கப் படுவதைக் கண்டிக்கிறார்களோ? தங்கள் வீட்டுச் சிறுவர்களையாவது, “வேண்டாமடா அந்த விநாசக் கருத்து! வேதபுராண இதிகாசாதிகள், அங்ஙனம் கூறவில்லை. அவைகளிலே கூறப்பட்ட கருத்துக்கு மாறாகச் சொல்லப்படும் பாடம், கேவலம் நாஸ்தீகம்,” என்று கூறித் தடுக்கிறார்களோ? “பூமி உருண்டை” என்று போதிப்பவர்களை நாஸ்திகர்க கென்று நிந்திக்கிறார்களோ? வாதுக்கு அழைக்கிறார்களோ? இல்லை! விட்டுக்கொடுத்து விட்டார்கள். பூமி, தட்டையாகவோ, உருண்டை யாகவோ இருக்கட்டும், நமக்கெனன என்று இருந்துவிட்டார்கள், அல்லது பூமி உருண்டைதான் என்று, ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிறார்கள், ஆகவே அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்று கூறி சமாதானம் பெற்றுவிடுகிறார்கள். ஏன்? இதிலே இலாப நஷ்டக்கணக்குப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை? பூமி தட்டையாக இருக்கிறது என்று நம்பினால்தான் தட்சணை, உருண்டை என்று ஊரார் ஏற்றுக்கொண்டால் கிடக்காது என்ற நிலைமை இல்லை. சுயநலம், இந்தக் கருத்து மாற்றத்தினால் கெடவில்லை. ஆகவே, தாராளமாகப் புதுக்கருத்தை ஏற்றுக்கொண்டு பழையை கருத்துக்குச் சீட்டுக் கொடுத்து விடுகின்றனர். ஆனால், வேறுசில பழைய கருத்துக் களை மாற்றிக் கொள்ளச் சம்மதிப்ப தில்லை, சுயநலமும் அந்தப் பழைய கருத்தும் ஒன்றாக ஓட்டிக்கொண்டிருப்பதால்.

பூமி உருண்டை என்ற புதிய கருத்தை ஏற்றுக்கொண்டதால் பூசுரக்கூட்டம நஷ்டம் காண்பதில்லை, ஆனால், தேவலோகம் என்று ஒருதனி இடம் கிடையாது, இறந்தவர்கள் அங்கு செல்வது என்பது புரட்டு, அப்படி அவர்களை அங்கே குடிஏறச் செய்வதற்காகவே, இங்கு பூதேவருக்குத் தட்சணைத் தரப்பட்டுச் சில சடங்குகள் செய்யப்படுகின்றன. இதுபொருள் பறிக்கும் தந்திரம், என்ற புதிய கருத்தை ஏற்றுக்கொண்டால், பழைய கருத்தை நம்பி மக்கள் தரும் பணம் கிடைப்பது நின்றுவிடும். ஆகவே நஷ்டம். எனவே, தமக்கு நஷ்டம் தரக்கூடிய புதுக்கருத்துக்களை அப்பூசரக்கூட்டம், எங்ஙனம் வரவேற்கும்? எதிர்க்கத்தானே செய்யும். ஆயிரம் தத்துவத்தைவிட அரைரூபாய் தட்சணை மேல் என்று எண்ணும் கூட்டமல்லவா அது. எங்ஙனம் அந்தக்கூட்டம் சுயநலத்தை இழக்கத்துணியும். அதற்குப் பிரத்யேகமான நற்குணம் வேண்டுமே, எங்ஙனம் அதனைச் சுயநலத்தையும் சுகபோகத்தையும் பாரம்பரியமாக ஆண்டு அனுபவித்துக் கொண்டு வரும் கூட்டம் பெறமுடியும்? இதனை உணராத சிலர், வேறு எத்தனையோ கருத்துக்கள், நாளாவட்டத்திலே நசித்துப்போனது போலவே, பொது அறிவு பரவினதால் அவை புதையுண்டதுபோல, மிச்சமிருக்கும் நச்சுநினைப்பும் பிச்சுப்பிள்ளை விளையாட்டும் தாமாகவே ஒழிந்து போகும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையிலே வடலூராரும், “கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்று கூறினார். கூறினதைக் கீதமாக்கிக் கொண்டனரே யொழியக் கண்மூடி வழக்கத்தை யார் வெட்டிப் புதைக்க முன்வந்தனர். அருட்பாவைப் பூசத்துக்கேற்ற பாசுரமாக்கினரே யொழியப் பூசுரப்பட்டு ஒழிப்புக்கான மார்க்கமாகக் கொண்டவர்கள் யார்? எனவேதான், ஒரு கூட்டத்து- க்கு அது பார்ப்பனக் கூட்டமாக இருப்பதால் என்று மட்டுமல்ல, எந்தக் கூட்டமாக இருப்பினும் சரியே, ஒரு கூட்டத்தின் சுயநலத்தை வளர்க்கும் எண்ணங்களைச் சுலபத்திலே மடியவிட மாட்டார்கள், இங்குமட்டுமல்ல, எங்கும்! அந்த எண்ணங்களைத் துணிவுடன் தாக்கத் தகர்த்தாலொழிய அவை மாளா. அவைமாள ஓட்டாது தடுக்க, சகல சதனங்கûளுயம் உபயோகிக்க சுயநலக்கூட்டம் ஒருதுளியும் தயங்காது. அந்தச் சாதனங்களிலே மிக முக்கியமானது, புராணப் பிரசாரம்! இதனை, நமது நண்பர்கள், இலக்கியச் சுவைக்காக ஏன்றோ, கல்வெட்டு, வரலாறு ஏன்றோ எண்ணிக் கொண்டு, செய்பவர்களாகக் கூட இருப்பர். கதை கிடக்கட்டும், இதிலே காணக்கிடைக்கும் வரலாற்றுத் துணுக்குகளின் மூலம் தமிழகத்தைக் காண்கிறோமே என்று பூரிக்கக்கூடும்.

“பங்கப்பழனத்து ஊழும் உழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று சங்கிட்டு ஏறிய”

என்ற செய்யுளைப் பாடி, “ஏன்னே! இந்நாட்டு வளம்! உழவர் ஊழுகின்றனர்! உழவுதானே உயிர்கட்கு இதாரம்! ஆகலானன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும் “ஊழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்றார். அத்தகைய உழவு! இங்கு மரங்களிலே மந்திக்கூட்டம்! அவை பலாவினைப் பறித்தன. பார்த்த உழவர், மந்தியை விரட்டுகின்றனர். யாங்ஙனம்? கல்கொண்டோ? இல்லை! கல் எது? கட்டாந்தரையோ அது! அல்ல! வயல்! எனவே உழவர், அங்கு கிடந்தது கொண்டு, மந்தியினை விரட்டலாயினர். என்ன கிடைத்தது. இங்கேதான் மெய்யன்பர்கள், நந்தமிழ் நாட்டின், தவம்நிறைந்த தமிழகத்தில், செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று இந்நாள் புலவர் ஆறும்பூதெய்திப் பாடியபடி பண்பு நிறைந்த தமிழகத்திலே, எத்தகைய வளம் இருந்தது என்பதனைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். வயலிலே சங்குகள் கிடைத்தன! வளமான நாடு! இதற்கு உண்டோ உடு? சங்குகள்! சங்குகள்! உழவர் கண்டது சங்குகளை! வாரினார்! வீசினார்!” என்று செய்யுளைப் பிழிந்து பிழிந்து செந்தமிழ்ச் சுவையைச் சொட்டச் செய்து, புராணமேயாயினும் புதுமைக்கு ஒவ்வாது எனினும், “புதைந்துள்ள பொன்னைக் காணீர், கலைக் கருவூலத்தைப் பாரீர்,” என்று கூறப் புராணங்களைப் பயன்படுத்திக் கொள்பவர்காகச் சிலர் இருக்கக்கூடும். ஏக்கருத்துக்காக, எம்முறையிலே இவர்கள் அந்தப் புராணங்களைப் பற்றிப் பேசினும் சரியே, பொதுவாக ஆம்முறை, புராணப் பிரசாரம் நûபெறுவதாகவே முடியும். விளைவும், இவர்களின் நெஞ்சை ஆள்ளும் கலைபரவுவதாகவோ, வரலாறு பரவுவதாகவோ இராது. விளைவு, கற்பூரக் கடையின் கணக்கும், கனபாடியின் தொந்தியும் பெருத்து விடுவதாகத்தான் இருக்கும். புராணப் பிரசாரத்தின் பலனைப் பூசுரக் கூட்டம் இனிமையாக அனுபவிக்கும், இதனை, அந்தக் கூட்டத்துக்குக் கூலியுமின்றிச் செய்த “குரலோர்” புலவர், படிப்பாளி, சூனாமானாவின் வைரி, அவர் நாவிலே சரஸ்வதியே தாண்டவமாடுகிறாள், சகலகலா வல்லவர், என்ற ஓசைப் பட்டங்களைப் பெற்றதன்றி வேறு உருவான பலனையும் பெறுவதில்லை. இதனை அவர்கள் உணருவதில்லை. உணர்ந்தோர் உரைத்தாலோ, சீறாமலும் இருப்பதில்லை! சிவநேயர்களின் சீற்றம் சிரிப்புக்கிடமானதே!! இங்கே சீறுகின்றனர் இச்செல்வர்கள். ஆனால் செல்புகுந்த ஏடுகளைச் செந்தமிழ் கலந்து நாட்டினருக்குத் தரும் இவர்தம் “சேவையால்” பட்டமரம் துளிர்த்தது போல, பாழ்பட இருந்த தமது சுகபோகவாழ்வு, மீண்டும் வளமாகிறது என்பதை உணர்ந்து, அந்தச் சிறுகூட்டம், சிரிக்கிறது!! பாவையர் படப்பிடிப்பும் கலைச்சுவையும், வரலாற்றுத் துறையும், உள்ளன என்று புராணங்களைப் போற்றிப் புகழ்பவர்கள், ஆரியத்தின் ஏஜெண்டுகள் - கமிஷனும் கிடையாது!! காமக்கூத்து நடைபெறும் இடத்திலே கற்பூரக்கடை வைப்பது கடவுள் நெறியைக் கயவரும் உணரச்செய்யும் புண்ய கைங்கரியமாகும் என்று கருதிச் செய்பவர் உண்டோ? செய்தால் பயன் காணமுடியும்! அதுபோல, காமக்கிருமிகள் நெளியும் பலபாடல்களுக்கு இடைஇடையே கடவுள் சொரூபத்தைக் காட்டுகிறோம் பாரீர் என்று புராணம் படிப்பதும், பயன்றற முறையாகும். புராணப் பிரசாரத்தின் விளைவாக, சன்மார்க்கம் பரவமுடியாதபடி போகிறது என்பது மட்டுமல்ல, கலைக்காக, வரலாற்றுக்காக என்று எதைக்கூறி அந்தக் காரியத்தைச் செய்தாலும் சரியே, ஆச்செயல், பூசுர அரசு அமைக்க, புலவர் முரசு கொட்டுகிறார் என்றே பொருள். இந்தக் காரியத்துக்கா தமிழ் அறிவு பயன்படுத்தப் படவேண்டும்? பெற்ற மகனைப் பெருநிதி படைத்தோனாகக் காண முடியாவிட்டாலும், பிறன்மனை நுழையாதபடியாவது தடுக்கக் கூடாதா - தடுத்தல் வேண்டாமா? கற்ற தமிழின் துணைகொண்டு, சமுதாயத்திலே கப்பிக் கொண்டுள்ள காரிருளை நீக்கும் கடமையைச் செய்யத்தான் தவறி விட்டார்களே, அத்தமிழை ஆரிய ஊமிழ்நீரிலே ஆழ்த்தும், அக்ரமத்தையாவது செய்யாதிருக்கக்கூடாதா?

(திராவிடநாடு - 17.2.46)